Categories
மாநில செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. சென்னை வந்த யூ.எஸ்.சி.ஜி.சி. மிட்ஜெட் கப்பல்…. சிறப்பாக நடைபெற்ற வரவேற்பு….!!!!

சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ள யூ.எஸ். சி. ஜி. சி. மிட்ஜெட் கப்பலை  சிறப்பாக வரவேற்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டில் உள்ள கடலோர காவல் படைக்கு சொந்தமாக 418 அடி நீளம் கொண்ட   யூ. எஸ். சி. ஜி. சி. மிட்ஜெட் என்ற  கப்பல் உள்ளது. இந்த கப்பல் 4  நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளது. இதனையடுத்து சென்னை துறைமுகத்திற்கு நேற்று வருகை தந்துள்ளது. அப்போது அந்த கப்பலுக்கு சிறப்பான வரவேற்புகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் குவாட் நாடுகள் மீதான சிறப்பு கவனத்துடன் இந்தோ-பசுபிக் பகுதியை வலுப்படுத்துதல்.

இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள கடல்சார் எல்லையை கண்காணித்து பாதுகாப்பதற்கு ஆதரவளித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த கப்பல் சென்னை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. இந்த கப்பலின் வருகையால் அமெரிக்கா மற்றும் இந்திய கடலோர காவல் படைகள் இடையேயான உறவு வலுப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |