இதுதான் பிரதமர் தேர்தலில் ரிஷி தோல்வி அடைந்ததற்கான காரணங்களாக கூறப்படுகிறது.
பிரித்தானியாவின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த இரண்டாம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் முன்னேறி சென்ற ரிஷி பாதி வழியில் பின் வாங்கினார். போட்டியில் தாமதமாக இணைந்த லிஸ் டிரஸ் வேகமாக முன்னேறி பிரித்தானியாவின் பிரதமர் பதவியை கைப்பற்றினார். ரிஷி திடீரென பின்னடைவை சந்தித்ததற்கான காரணங்கள் பின்வருமாறு.
போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்த உடனே ரிஷி ready for Rishi என்ற பெயரில் தனது பிரச்சார வீடியோவை வெளியிட்டார். இது கட்சி தலைவரான போரிஸ் ஜான்சனுக்கு செய்த நம்பிக்கை துரோகமாக பார்க்கப்பட்டது. ஆரம்பத்தில் பேராதரவை பெற்ற ரிஷியின் கூட்டத்தை சேர்ந்த சாஜித் ஜாவித், நாதிம் ஸவாஷி ஆகியோர் அளித்த ஆதரவை வாபஸ் வாங்கியதை தொடர்ந்து பலர் லிஸ் டிரஸ் பக்கம் திரும்பினார்கள்.
இந்நிலையில் ரிஷி தான் நகர்ப்புற திட்டங்களுக்காக ஏற்கனவே வறுமையில் இருக்கும் கிராமப் பகுதியில் இருந்து பணம் வாங்கியதாக வீடியோ வெளியிட்டார். இதனால் பலரும் ஆத்திரமடைந்தனர். மேலும் ரிஷியின் மனைவியான அக் ஷதா பிரித்தானிய மகாராணியை விட பணக்காரர் என்ற செய்தி பலரையும் புருவம் உயர்த்த வைத்தது. மேலும் ரிஷி அமெரிக்காவில் இருந்து பிரித்தானியா திரும்பிய பிறகும் அவர் அமெரிக்க கிரீன் கார்டை தொடர்ந்து வைத்திருந்தார். ஆனால் மக்கள் விலைவாசியால் அவதிப்படும்போது அவர் விலை உயர்ந்த ஆடைகள் அணிந்தும், பெரிய வீட்டில் வாழ்ந்து வந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அனைத்து குற்றச்சாட்டுகளும் இணைந்து ரிஷியை தேர்தலில் தோல்வியடைய செய்துள்ளது.