பிரபல நடிகை தயாரித்துள்ள படத்தின் தலைப்பிற்கு இயக்குனர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரம்யா. இவர் தற்போது ஆப்பிள் பாக்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தை தனியாக நடத்தி வருகிறார். தற்போது “சுவாதி முத்தின மலே ஹனியே” என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த தலைப்புக்கு மூத்த இயக்குனராக பணிபுரிந்து வரும் எஸ். வி. ராஜேந்திர சிங் பாபு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்த அவர் கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருந்ததாவது, “நான் கடந்த 1990-ஆம் ஆண்டு பன்னட் கெஜ்ஜே என்ற படத்தை தயாரித்தேன். அந்த படத்தில் உள்ள ஒரு பாடலில் “சுவாதி முத்தின மலே ஹனியே என்ற வரி வரும். இந்த பாடல் அப்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் நான் இந்த வரியை தயாரித்து வரும் ஒரு படத்தில் தலைப்பாக வைத்துள்ளேன். அந்த படத்தில் நடித்த நடிகர் அம்பரீசை உயிரிழந்தால் தற்போது படப்பிடிப்பு நிலுவையில் உள்ளது. எனவே ரம்யா இந்த பெயரை அவரது படத்திற்கு வைக்கக் கூடாது”என அதில் கூறியுள்ளார்.