Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. பிரபல நாட்டில் கேமராக்களை பொருத்த விரும்பும் புதின்… வெளியான தகவல்….!!!!

ரஷியாவால் ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் சிசிடிவி கேமரா பொருத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் உள்ள uri மாகாணத்தில் ரஷிய ராணுவ வீரர்கள் நினைவாக ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 1799- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பேரரசர் நெப்போலியனுக்கு எதிரான போர் ஒன்றின் போது உயிரிழந்த ரஷிய  ராணுவ வீரர்கள் நினைவாக இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எத்தனை காலமும் அமைதியான நினைவிடமாகவும், ஒரு சுற்றுலா தளமாகவும்  விளங்கியது அந்த இடம். ஆனால் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து அந்த நினைவிடத்தின் அருகே சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடக்க துவங்கியுள்ளது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அந்த நினைவிடத்தின் மீது உக்ரைன் கொடியில் உள்ள நிறங்களான நீலம் மற்றும் மஞ்சள் நிற பெயிண்டை யாரோ ஊற்றி விட்டார்கள். ஆகவே தான் இந்த இடத்தில் சிசிடிவி கேமராக்களை பொருத்த விரும்புவதாக புதின்  கூறியுள்ளார். ஆனால் அந்த நினைவிடம் மட்டுமே ரஷியாவுக்கு சொந்தமானது. அதை சுற்றி இருக்கும் இடம் சுவிட்சர்லாந்துடையது. ஆகவே சட்டப்படி ரஷியாவால் அங்கு சிசிடிவி கேமராக்களை பொருத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |