லிஸ் ட்ரஸ் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணத்தை ரிஷி கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கொண்டே வந்தது. இதனையடுத்து அவர் தனது பதவியை சில மாதங்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார். இந்நிலையில் அவருக்கு பதில் ஒருவரை கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுப்பதற்கான போட்டி துவங்கியது. இந்த போட்டியில் முன்னேறி சென்றார் ரிஷி. ஆனால் கடைசி நேரத்தில் வெற்றி பெற்ற லிஸ் ட்ரஸ் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், பிரித்தானிய பிரதமராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் வேகமாக முன்னேறி வந்த ரிஷி கடைசி நேரத்தில் அவரது சக நாடாளுமன்ற உறுப்பினர்களால் கைவிடப்பட்டதற்கு காரணம் அவரது தோலின் நிறமாகக் கூட இருக்கலாம் என நாட்டு மக்கள் பலர் கூறியுள்ளனர். ஆனால் பிரதமருக்கான போட்டியில் வெற்றி பெற்றது போல் பிரதமர் பொறுப்பு எளிதாக இருக்கவில்லை. தனது கொள்கைகளால் வீழ்ச்சி அடையும் பிரித்தானிய பொருளாதாரத்தை மீட்க முடியாது என்பதை புரிந்து கொண்ட லிஸ் ட்ரஸ் சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழுத்தம் கொடுக்கவே 46 நாட்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து ரிஷி கூறியதாவது. கட்சியின் நலன் கருதி என்னை தலைவராக தேர்வு செய்வதாகவும், தான் சந்தித்த கசப்பான பிரதமர் போட்டியில் தோற்ற பிறகு மீண்டும் பிரதமராவேன் என நான் எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார்.