Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் அதிபர்…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாட்டின் முன்னாள் அதிபர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக இருந்தவர் ஆசிப் அலி . இவர் மக்கள் கட்சியின் தலைவராகவும் உள்ளார். தற்போது உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அவரின் மகள் பக்தாவர்  பூட்டோ சர்தாரி தனது   டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் எனது தந்தையின் நுரையீரல் அருகே நீர் கோர்த்திருக்கிறது. இதற்காக அவர் பல மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நோய் தொற்று அவர் கடந்த ஜூலை மாதம் துபாய்க்கு பயணம் மேற்கொண்ட போது ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டார். மேலும் மருத்துவர்கள் கூறியது போல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனையடுத்து தற்போதும் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வெல்லும் பாதித்த பகுதிகளுக்கு நேரில் செல்ல முடியவில்லை. எனவே அவருக்கு பதிலாக அந்த பகுதி மக்களுக்கு நேரில் செல்லக்கூடிய மகன்களை பெற்றதற்காக அவர் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்காக வேண்டியுள்ள அனைவருக்கும் நன்றி எனக் கூறியுள்ளார்

Categories

Tech |