கோகுலம் பட பாணியில் காதலனின் பெற்றோருக்கு பெண் ஒருவர் பணிவிடை செய்து வருகிறார்.
வேளாங்கண்ணி அருகே சபரி கிருஷ்ணன் என்பவருக்கு 26 வயதாகிறது. இவர் 24 வயதான ரேவதி என்பவரை 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து பெற்றோர் சம்மதத்துடன் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது .ஆனால் ஈபி யில் பணியாற்றிவந்த சபரி கிருஷ்ணன் வேலை செய்யும் போது ஏற்பட்ட விபத்தில் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். அன்று முதல் கடந்த ஒரு வருடமாக ரேவதி சபரியின் பெற்றோரை தன்னுடைய பெற்றோராக எண்ணி அவரை கவனித்து பணிவிடை செய்து வருகிறார். தான் திருமணம் செய்து கொள்ளப் போவது இல்லை என்றும், வாழ்நாள் முழுவதும் அவரை எண்ணியே வாழப் போவதாக அவர் கூறியுள்ளார்.