Categories
உலக செய்திகள்

ஓ இப்படித்தான் முடி சூட்டப்படுமா?…. அரச குடும்பம் வெளியிட்ட முக்கிய அறிக்கை….!!!!

சார்லஸ் முடிசூடும் விழா குறித்து அசர குடும்பம்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தின் ராணி  இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக தனது 96-வது வயதில் கடந்த மாதம்  உயிரிழந்தார். அதன்பின்னர் புதிய மன்னராக சார்லஸ் அறிவிக்கப்பட்டார். இதனால் இவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுகிறார். இந்நிலையில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடி சூட்டு விழா நடைபெறும் தேதி குறித்து அரச குடும்பம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வருகின்ற 2023 -ஆம் ஆண்டு மே மாதம் 6-ஆம்  தேதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில்  மன்னர் சார்லஸ் ராணியாருடன் முடி சூட்டப்படுவார்.  தற்போது அவருக்கு 74 வயது ஆகுவதால் இவர்தான் நாட்டின் மிக வயதான முடி சூட்டப்பட்ட நபர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். அதன் பிறகு அவரது ஆட்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கும்.

இந்நிலையில் பாரம்பரிய முறைப்படி கையில் செங்கோல், தடி ஆகியவற்றை  ஏந்தி கொண்டு மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணைகள் அமர்வார். பிறகு மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புதிய கிரீடம் சூட்டப்படும். அதன்பின்னர் அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். இந்நிலையில் ராணி  கடந்த 1953 ஆம் ஆண்டு முடிசூட்டிக்கொண்டார். அப்போது அந்த விழாவில் 129 நாடுகளை சேர்ந்த 8 ஆயிரம்  விருந்தினர்கள் கலந்து கொண்டனர். ஆனால் தற்போது சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா மிக எளிமையான முறையில் நடைபெறும் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

Categories

Tech |