பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் மற்றும் அவரது கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப் தனது அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பேசிய ரகசிய பேச்சுக்கள் ஆடியோவாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த ஆடியோ அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோவை முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியை சேர்ந்த பவத் சவுத்ரி வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆடியோ வைரலாகுவதை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து ஷெபாஸ் ஷெரீப் வேண்டும் என இம்ரான் காணும், எதிர்க்கட்சித் தலைவர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சி தலைவர்கள் உமர் ஷா மஹ்மூத் குரேஷி மற்றும் அசான் ஆகியோர் கட்சியின் தலைவரான இம்ரான் காணுடன் அமெரிக்க சைபர் கிரைம் பற்றி பேசுவது தொடர்பாக 2 ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதனால் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வெளிநாட்டு சதி என கூறப்படும் இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.