Categories
உலக செய்திகள்

ஓ இவர்தான் எல்லாத்துக்கும் காரணமா?…. முன்னாள் அதிபர் டிரம்பின் மீது குவிந்து வரும் குற்றச்சாட்டுகள்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

அமெரிக்க முன்னாள் அதிபர்  டிரம்ப் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டில் உள்ள நாடாளுமன்றத்தின் மீது டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு போலீஸ் உள்ளிட்ட 5  அதிகாரிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நாட்டின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக மோசமான நிகழ்வாக பதிவானது. இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் என கூறி  அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஏனென்றால் அவர் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவில் குளறுபடி நடந்துள்ளதாக கூறினார். தனது ஆதரவாளர்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை பரப்பியுள்ளார். இதனால் இந்த தாக்குதல் நடந்ததாக கூறி அவர்  மீது காவல்துறையினர் பல்வேறு வழக்குகள் பதிவு செய்தனர். மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட மச்சிகன்  மாகாணத்தை சேர்ந்த அந்தோணி ராபர்ட் வில்லியம்ஸ் என்பவரை  காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிமன்றம் அந்தோணி ராபர்ட் வில்லியம்சுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |