சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதி அடுத்த மாதம் பதவி ஏற்கிறார்.
தற்போது சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் உள்ளார். இவர் அடுத்த மாதம் 8-ஆம் தேதி பணி நிறைவு பெறுகிறார். இந்நிலையில் ஓய்வு பெற உள்ள தலைமை நீதிபதி தனக்கு அடுத்த இடத்தில் உள்ள மிக மூத்த நீதிபதியை தலைமை நீதிபதி பொறுப்புக்கு பரிந்துரை செய்வது வழக்கம். அதேபோல் யு.யு லலித் அடுத்த மூத்த தலைமை நீதிபதியாக நியமிக்க டி.ஒய். சந்திரகுட் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் டி.ஒய் சந்திரகுட்டை சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கான பரிந்துரை கடிதத்தை இன்று காலை 11 மணிக்கு தலைமை நீதிபதி சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளார். இதனையடுத்து வருகின்ற 9-ஆம் தேதி நாட்டின் 50-வது தலைமை நீதிபதியாக அவர் பொறுப்பு ஏற்க உள்ளார். மேலும் சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக வரும் டி.ஒய். சந்திரகுட் 2024-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி வரை பொறுப்பில் இருப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.