Categories
தேசிய செய்திகள்

ஓ இவர்தான் மாவோயிஸ்டு தலைவரா?…. தலைக்கு 15 லட்சம் சன்மானம் அறிவித்த அரசு…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

மாவோயிஸ்டு முக்கிய  தலைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள சத்தீஸ்கர், மராட்டியம், ஜார்கண்ட், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின்  ஆதிக்கம்  அதிகமாக உள்ளது. இந்த மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசார் உடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நக்சலைட்டுகள் செய்த குற்றங்களின் அடிப்படையில் தலைக்கு அரசு சார்பு லட்சக்கணக்கில் சன்மானமும் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மாவோயிஸ்டு  முக்கிய தலைவர் தீபக் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் தீபத்தின் தலைக்கு ஜார்க்கண்ட் அரசு 15 லட்ச ரூபாய் சன்மானம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தீபக் மராட்டிய மாநிலத்தில் பதுக்கி இருப்பதாக மராட்டிய பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். பின்னர் அங்கு பதுங்கி இருந்த மாவோயிஸ்டு  முக்கிய தலைவர் தீபக்கை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் அவரது காலில்  காயம் இருப்பதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Categories

Tech |