எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் மும்பை கடல் பகுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறது. இதற்காக ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் வயல்கள் மற்றும் துரப்பன நிலையங்களை அமைத்து உள்ளது. இந்த இடங்களுக்கு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்துச் செல்லும் பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. அதன்படி இன்று எண்ணெய் துரப்பண நிலையத்திற்கு இன்று ஊழியர்களை ஒரு ஹெலிகாப்டர் அழைத்துச் சென்றது. இதில் 2 பைலட்கள், 7 ஊழியர்கள் இருந்தனர். இந்நிலையில் அந்த ஹெலிகாப்டர் எண்ணெய் துரப்பன நிலைய தளத்தில் தரை இறங்க வேண்டிய நிலையில் திடீரென கடலில் விழுந்து விபத்தில் சிக்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்து ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் துரப்பன நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிவேக மீட்பு படையை அனுப்பியது. மேலும் கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்றது. இதனையடுத்து படகு மற்றும் ஹெலிகாப்டர் மூலம் 9 பேர் மீட்கப்பட்டனர். இவர்களில் 4 பேர் மயங்கி நிலையில் இருந்தன. அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது 4 பேரும் எற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் உயிரிழந்தவர்களில் 3 பேர் ஓஎன்ஜிசி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் மற்றொருவர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய ஊழியர் என்று தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்