Categories
சினிமா தமிழ் சினிமா

ஓ.டி.டி-யில் யசோதா படத்தை வெளியிட தடை…. எதற்காக தெரியுமா?…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

சமந்தா நடித்துள்ள “யசோதா” திரைப்படம் அண்மையில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.28 கோடி வசூலித்துள்ளது. வாடகைத் தாய் மையத்தில் நடக்கும் மோசடிகளையும், அதனை சமந்தா எப்படி கண்டுபிடித்து வெளியுலகுக்கு அம்பலப்படுத்துகிறார் என்பதும் தான் கதை.

உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு இப்படத்தை எடுத்திருப்பதாக படக் குழுவினர் தெரிவித்திருந்தனர். இவ்வாறு வாடகைத்தாய் மோசடி செய்யும் மருத்துவமனைக்கு படத்தில் ஒரு பெயர் வைத்துள்ளனர். இதனால் ஒரு பிரச்சினை ஆரம்பமாகி இருக்கிறது. நிஜமாகவே ஐதராபாத்தில் அந்த திரைப்படத்தில் குறிப்பிட்டுள்ள பெயரில் ஒரு மருத்துவமனை இயங்குகிறது.

அந்த மருத்துவமனை நிர்வாகம் சார்பாக யசோதா படத்துக்கு எதிராக ஐதராபாத் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதாவது, எங்களது மருத்துவமனை பெயருக்கு களங்கம் விளைவிக்கும் யசோதா படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஓடிடி-யில் யசோதா படத்தை டிசம்பர் மாதம் 19-ஆம் தேதி வரை வெளியிட தடை விதித்தும், பட நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியும் உத்தரவு பிறப்பித்தார்.

Categories

Tech |