Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓ. பன்னீர் செல்வம் – அதிமுகவில் பரபரப்பு …!!

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை பெங்களூர் சிறையில் பெற்ற சசிகலா விடுதலை செய்யப்பட்டார். பின்னர் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து குணமடைந்து தற்போது பெங்களூருவில் ஓய்வெடுத்து வருகிறார்.

அவர் விடுதலை செய்யப்பட்ட நாள் முதல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் அதிமுக நிர்வாகிகள் பலரும் சசிகலா விடுதலையைவால் போஸ்டர் ஒட்டி, கொண்டாடி வருகின்றனர். இவர்கள் மீது அதிமுக தலைமைக்கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அதிமுகவினர் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எங்கள் குலசாமியே தமிழக தலையெழுத்தை மாற்ற தீயாக வரும் தியாகத் தலைவி சின்னம்மா என வாசகங்கள் அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளன. இது போன்ற போஸ்டர்கள் தேனி மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |