அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி பாலமுருகன் பெரியகுளத்தில் காலமானார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பாலமுருகன் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து நேற்று இரவு வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில் இன்று காலமானார். அவருடைய மறைவிற்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் முக ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் பாலமுருகனை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், அவருடைய குடும்பத்திற்கும் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்து கொள்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.