Categories
அரசியல்

ஓ.பி.எஸ் கடிதத்திற்கு பதில் கடிதம்…. இ.பி.எஸ் என்ன சொன்னார் தெரியுமா….?

ஓ.பி.எஸ் கடிதத்தை ஏற்க முடியாது என இ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க கட்சியில் சமீபத்தில் ஒற்றைத் தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கூற ஓ. பன்னீர்செல்வம் இரட்டைத் தலைமை தான் சிறந்தது என்று கூறி வருகிறார். இதன் காரணமாகத்தான் ஓ. பன்னீர்செல்வத்திற்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், ஏ மற்றும் பி விண்ணப்பங்களை சமர்ப்பித்தால் மட்டுமே வேட்பாளர்கள் தங்களுக்கு வேண்டிய சின்னங்களை பெற முடியும். இதன் காரணமாக ஓ.பி.எஸ் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதி அனுப்பி இருந்தார். அந்த கடிதத்திற்கு தற்போது இ.பி.எஸ் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் பொதுக்குழு கூட்டத்தின் போது ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது என்றும், உங்களுடைய கடிதத்தை ஏற்க முடியாது என்றும் எழுதப்பட்டுள்ளது.

Categories

Tech |