ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிர் எதிர் துருவங்களாக மாறி ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி வருகின்றனர். இதில் அதிமுக கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் இபிஎஸ் பக்கம் இருப்பதால் அவருக்கு சாதகமாகவே அனைத்து நிகழ்வுகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் வங்கி கணக்குகளை மேற்கொள்ளலாம் என வங்கியில் இருந்து அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது உச்ச நீதிமன்றம் கட்சி அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளது.
இதன் காரணமாக தற்போது ஓபிஎஸ் சசிகலா போன்று ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். அதாவது சசிகலா பல்வேறு இடங்களுக்கு சென்று தொண்டர்களை சந்தித்து வருவது போன்று, ஓ பன்னீர்செல்வமும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனக்கான ஆதரவாளர்களை திரட்டுவதற்கு முடிவு செய்துள்ளாராம். அதன்படி முதலில் மதுரை மாவட்டத்தில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்கு ஓபிஎஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஓபிஎஸ் இதுவரை தன்னுடைய மகன்களான ரவீந்திரநாத் மற்றும் ஜெயபிரதீபை எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் அறிமுகப்படுத்தாத நிலையில், இனிவரும் காலங்களில் ஓபிஎஸ் மற்றும் அவருடைய மகன்களை சேர்த்து பார்க்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.