Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓ.பி.எஸ். வீட்டில் ஆலோசிக்கப்பட்டது என்ன ?

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் மூத்த அமைச்சர்களான வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சட்டத்துறை அமைச்சர், வனத்துறை அமைச்சர் உள்ளிட்ட 14 அமைச்சர்களோடு பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் என மொத்தம் 16 பேர் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். கட்சிகளில் நடக்கக்கூடிய முரண்கள் குறித்தெல்லாம் பேசியிருக்கிறார்கள், கலந்தாலோசித்து இருக்கிறார்கள். ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையின் போது… இது முக்கியமான ஒரு தருணமாக இருக்கிறது, இந்த தேர்தல் என்பது நம்முடைய கட்சியை பொறுத்தவரை மிகவும் முக்கியமான நேரம். எனவே நாம் இந்த பிரச்சனைகளை வளர விடாமல் உடனடியாக இதற்கான ஒரு தீர்வு காண்பது சரியாக இருக்கும் என்கின்ற கருத்தை முன்வைத்து இருக்கிறார்கள்.

அப்போது ஓ பன்னீர்செல்வமம் இந்த கருத்துக்களை கேட்டுக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடந்த சில நிகழ்வுகள்,  அதற்கு பிறகு இந்த 4 ஆண்டுகளில் தனித்து அவர்கள் இயங்கியது,  ஒன்றாக இணைந்து செயல்பட… பேசப்பட்ட விஷயங்கள், கட்சியில் ஒன்றாக இணைந்த பிறகு கட்சியினுடைய அமைப்பு எப்படி செயல் படவேண்டும் ? என்ற பேசிய விஷயங்கள், அதற்குப் பிறகு இந்த நான்கு ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பிலும்,  கட்சிகளிலும் நடக்கக்கூடிய நிலவரங்கள் என்ன ? போன்ற பல்வேறு விவரங்களையும் பன்னீர்செல்வம் பேசியதாக தெரிகிறது.

இதில் அமைச்சர்கள் பேசும் போது…. உங்களுக்கு தெரியாத விவரங்கள் இல்லை. நீங்கள் இரண்டு பேரும் பேசி முடிவெடுப்பது மிக அவசியமாக இருக்கிறது. இந்த தருணத்தில் முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்பதை நீங்கள் இருவரும் நேரடியாக பேசி உங்களுக்குள் ஒருவரை முடிவு செய்வது சரியாக இருக்கும் என்கின்ற கருத்தை முன்வைத்து தாக தெரிகிறது. அப்போது இதற்கு ஒரு குழு அமைக்கப் பட்டால் சரியாக இருக்கும் ? முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை குழு அமைத்து முடிவு செய்வோம் அதற்க்கு நான் உடன்படுகிறேன் என்று பன்னீர்செல்வம் தெரிவித்ததாக தகவலாக இருக்கிறது.

அதே போல எதிர் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் உறுதி செய்யப்பட்ட நிலையில் ஆளும் கட்சிகளும் அப்படி ஒரு நிலை வேண்டும். தேர்தலையொட்டி அப்படியான நிலை வரும்போது  குழப்பங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு உடனடியாக முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு என்பதை சரியாக இருக்கும் என்பது பல அமைச்சர்கள் உடைய கருத்தாக இருக்கிறது. இந்த கருத்துக்கள் எல்லாம் இந்த கூட்டத்தில் பேசப் பட்டன. இந்த ஆலோசனை கூட்டம் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |