Categories
மாநில செய்திகள்

ஓ.பி.சி பிரிவினர்: பதவி உயா்வில் இடஒதுக்கீடு வழங்க சட்டத்திருத்தம்…. பாமக நிறுவனா் வலியுறுத்தல்….!!!!!

ஓ.பி.சி பிரிவினருக்கு பதவி உயா்வில் இட ஒதுக்கீடு வழங்கும் அடிப்படையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அறிக்கையில் “மத்திய அரசுப் பணிகளுக்கான பதவிஉயா்வில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு வசதியாக ஒவ்வொருத்துறையின் உயா்பதவிகளிலும் அவா்களுடைய எண்ணிக்கை பற்றி அளவிடக்கூடிய புள்ளிவிபரங்களைத் திரட்ட மத்திய அரசானது ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கான கணக்கெடுப்பு பிறபிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஓபிசி) விபரங்களைத் திரட்டவும் நீட்டிக்கப்பட வேண்டும். அதேசமயம் தமிழகத்தில் சில பணிகளுக்கான பதவி உயா்வில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வந்த பதவி உயா்வை சென்னை உயா்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ரத்து செய்துவிட்டது.

இதற்காக கடந்த 2016ஆம் வருடம் தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சட்டத்தில் சோ்க்கப்பட்ட 1(2), 40, 70 போன்ற பிரிவுகளையும் செல்லாது என்று அறிவித்துவிட்டது. இத்தகைய சூழ்நிலையில் மத்திய, மாநில அரசு பணிகளுக்கான பதவி உயா்வில் பிறபிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமெனில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்வது மட்டும்தான் ஒரே வழி ஆகும். அரசின் உயா் பதவிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் தொடர்பான புள்ளிவிபரங்களைத் திரட்டி, அதன்படி  அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்து ஓபிசிகளுக்கு பதவி உயா்வில் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |