Categories
மாநில செய்திகள்

ஓ.பி.சி. மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு தீர்ப்பு ஏமாற்றம் – மு.க.ஸ்டாலின்

இரட்டை வேடம் போடாமல் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு பெற பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவ கல்விக்கான இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு இந்த கல்வி ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன மாணவர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மத்திய பாஜக அரசும் மாநில திமுக அரசும் கூட்டணி வைத்து இடம் ஒதுக்கீடு மீது இடி விழுவதை போன்று தாக்குதல்களை ஏற்படுத்தி கொண்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டில் பிரதமர் காட்டி அவசரத்தை பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கும் காட்ட வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எல்லாவற்றிலும் இரட்டை வேடம் போடாமல் சமூகநீதியை காப்பதிலும் கண்துடைப்பு நாடகம் நடத்தாமல் மருத்துவ கல்விக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் இந்த ஆண்டு இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு அரசியல் ரீதியான அழுத்தத்தை பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இந்த ஆண்டு இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |