Categories
தேசிய செய்திகள்

ஓ மை காட்… ஓ மை காட்… பாலியல் வழக்கில் கைதான டிக் டாக் பிரபலம் …!!

விசாகப்பட்டினத்தில் 14வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் டிக்டாக் பிரபலம் பார்கவ்வை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சேர்ந்தவன் டிக்டாக் பிரபலம் பார்கவ். நகைச்சுவையான விடீயோக்களை வெளியிட்டு வந்ததால் பன் பக்கேட் பார்கவ் என்று அழைக்கப்பட்ட இவன், ஓ மை காட்… ஓ மை காட் என்று பேசும் விடியோக்கள் மூலம் பரவலாக அறியப்பட்டார். இந்த நிலையில் 14 வயது சிறுமி ஒருவருடன் பழகி வந்த இவன், தன்னை காதலிக்க சொல்லி அச்சிறுமியை கட்டாயப்படுத்தி உள்ளார். ஆனால் சிறுமி அதற்கு மறுக்கவே, உன்னுடைய புகைப்படங்கள் என்னிடம் உள்ளது. அதை பேஸ்புக்கில் பதிவிட்டு விடுவேன் என மிரட்டி உள்ளார்.

மேலும் இதை பயன்படுத்தி சிறுமியை பார்கவ் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுமி நான்கு மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்த அவரது குடும்பத்தினர், விஷயத்தைத் தெரிந்து கொண்டு விசாகப்பட்டினத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து பார்கவ்வை தேடி பிடித்து கைது செய்த காவல்துறை, அவனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |