ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் யோகிபாபுவின் ராஜகுரு கதாபாத்திரம் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகின் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருகின்றார் சதீஷ். இவர் தற்போது யுவன் இயக்கத்தில் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை தர்ஷா குப்தா நடிக்கின்றார். இந்த டத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன் அறிமுகமாகின்றனர். மேலும் இப்படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், ஜி பி முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றார்கள்.
இத்திரைப்படத்தை வீரசக்தி மற்றும் சசிகுமார் சேர்ந்து தயாரிக்கின்றார்கள். படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றது. அண்மையில் சதீஷ் மற்றும் சன்னி லியோன் இடம்பெற்ற போஸ்டர் வெளியான நிலையில் தற்பொழுது யோகி பாபுவின் ராஜகுரு போஸ்டர் வெளியாகி இருக்கின்றது. இந்த போஸ்டர் வெளியாகி தற்பொழுது ரசிகர்களை ஈர்த்து வருக்கின்றது.