Categories
தேசிய செய்திகள்

கங்குலியை பி.சி.சி.ஐ தலைவர் ஆக்கியதில் அவர்களுக்கு பங்கு உண்டா…? பா.ஜ.க துணைத் தலைவர் பேச்சு… வலுக்கும் குற்றச்சாட்டு…!!!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கடந்த 2019 ஆம் வருடம் சௌரவ் கங்குலியும் செயலாளராக அனுஷாவின் மகன் ஜெய்ஷாவும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களது பதவிக்காலம் முடிவடைந்து இருக்கின்ற நிலையில் இந்த பதவிகளுக்கான தேர்தல் வருகிற 18-ஆம் தேதி பி சி சி ஏ இன் ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் நடத்தப்பட இருக்கிறது. இதில் புதிய தலைவராக 1983 ஆம் வருடம் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய அணியின் ஹீரோ ரோஜர் பின்னி போட்டியில்லாமல் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த 67 வயதான ரோஜர் பின்னி பி சி சி ஏ இன் 36-வது தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் அதேசமயம் ஜெய்ஷா இரண்டாவது முறையாக பி சி ஐ செயலாளராக தொடர இருக்கின்றார். ஜெய்ஷாவுக்கு இரண்டாவது முறை வாய்வு அளிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அதே போல் கங்கோலிக்கும் அளிக்கப்படாது தான் தற்போது அரசியலில் பெரிய சர்ச்சையாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் பதவி மீண்டும் ஒரு சவுரவ் கங்குலிக்கு அளிக்கப்படாதது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ், பா. ஜனதா இடையில் கருத்து மோதல் வலுத்திருக்கின்றது.

கடந்த வருடம் மேற்கு வங்காள தேர்தலின் போது கங்குலி பா. ஜனதாவில் இணைவார் என அந்த கட்சி ஒரு செய்தியை மக்கள் மத்தியில் பரப்பியுள்ளது. ஆனால் அதற்கு மாறாக கங்குலி, பா ஜனதாவில் சேராததால் அவர் தற்போது குறிவைக்கப்பட்டு இருக்கிறார் என மேற்கு வங்காள ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியிருக்கிறது. மேலும் இது பற்றி ட்விட்டர் பதிவில் திரிணாமுல் காங்கிரஸின் மக்களவை எம்பி சாந்தனுசன் கூறியிருப்பதாவது, அரசியல் பலிவாங்கலுக்கு மற்றொரு உதாரணம் அமைச்சரின் மகனுக்கு வழங்கப்பட்ட இரண்டாவது வாய்ப்பு கங்குலிக்கு ஏன் வழங்கப்படவில்லை. அவர் மம்தா பானர்ஜியின் மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்லது பா ஜனதாவில் சேரவில்லை என தெரிவித்துள்ளார்.

அதே சமயம் சவுரவ் கங்குலி ஒருபோதும் தங்களுடன் இணைத்துக் கொள்ள விரும்பாத திரிணாமுல் காங்கிரஸ் தற்போது பி சி சி ஏ இன் மாற்றம் பற்றி முதலைக்கண்ணீர் வடிக்கிறது என அந்த கட்சிக்கு பா.ஜனதா பதிலடி கொடுத்திருக்கின்றது. திரிணாமுல் காங்கிரசின் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் பேசும்போது இந்த விவகாரத்தில் கட்சி நேரடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை ஆனால் தேர்தலுக்கு முன்னும் பின்னும் இது போன்ற பிரச்சாரங்களை பாஜக செய்யும் என்ற காரணத்தினால் கங்குலியின் பதவி விவகாரத்தில் அரசியல் இருக்கிறது என ஊடகத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டியது பா ஜனதாவின் பொறுப்பு இது சவுரவ் கங்குலி பா.ஜனதா அவமானப்படுத்தியதாகவே தெரிகின்றது. இந்த நிலையில் இந்த நேரத்தில் கங்குலியே இதுபற்றி விளக்கம் அளிக்க சரியான நபர் என நான் கருதுகின்றேன்.

மேலும் இது பற்றி அவருக்கு ஏதாவது அரசியல் கருத்துக்கள் இருந்தாலும் அதனை அவர் எந்த அளவுக்கு வெளிப்படுத்துவார் என தெரியவில்லை என கூறியுள்ளார். மேலும் கடந்த மே மாதம் கங்குலியின் வீட்டிற்கு பா ஜனதா மூத்த தலைவர் ஒருவர் இரவு விருந்துக்கு சென்றதையும் அவர் சுட்டிக்காட்டி இருக்கின்றார். திரிணாமுல் காங்கிரசின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என தெரிவித்துள்ள பாஜகவின் தேசிய துணை தலைவர் திலீப் கோர்ஸ் பாஜக எப்போது கங்குலியை கட்சியில் இணைக்க முயற்சி செய்தது என தெரியவில்லை. கங்குலி ஒரு கிரிக்கெட் சாம்பியன் பி சி சி ஏ யில் தற்போது நடைபெற்றுள்ள மாற்றம் பற்றி சிலர் முதலை கண்ணீர் வடித்து வருகின்றனர். கங்குலியை பி சி சி ஏ இன் தலைவர் ஆகியதில் அவர்களுக்கு ஏதாவது பங்கு இருக்கிறதா எல்லா விஷயங்களையும் அரசியல் ஆக்குவதை  திரிணாமுல் காங்கிரஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |