Categories
அரசியல் சினிமா மாநில செய்திகள்

கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது? மாஃபியா யார்? – குருமூர்த்திக்கு டிடிவி தினகரன் பதிலடி …!!

சென்னையில் நடந்த துக்ளக் விழாவில் சசிகலாவை பற்றி குருமூர்த்தி பேசியது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இதற்க்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டனங்கள் எழுந்த நிலையில் அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள பதிவில்,

துக்ளக் விழாவில், அதன் ஆசிரியராக இருப்பவர் கையூட்டுப் பெற்றுக்கொண்டு பேசியதாக ஜெயக்குமார் போன்றவர்களெல்லாம் விமர்சிக்கும் அளவுக்கு குருமூர்த்தியின் தரம் தாழ்ந்து போனது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது.

கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது? மாஃபியா யார்? என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது தமிழ்நாட்டு மக்கள்தானே தவிர, கங்கை புத்திரன் பீஷ்மராகவே தன்னை பாவித்துக்கொள்ளும் குருமூர்த்தி போன்ற மனநிலை கொண்டவர்கள் அல்ல !

ஒரு சிலர் தங்களைத் தாங்களே அதிமேதாவிகளாக, பவித்திரர்களாக பாவித்துக்கொண்டு பதற்றத்தில் பிதற்றுவதற்கெல்லாம் பதில் சொல்லி நமது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பலரும் நமது கருத்தைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் எனது கருத்தை இங்கே பதிவிடுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |