சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கசடதபற’ என்கிற ஆந்தாலஜி படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர், ரெஜினா, சாந்தனு, பிரேம்ஜி, விஜயலட்சுமி, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான், சாம் சி.எஸ்., சந்தோஷ் நாராயணன், பிரேம்ஜி, யுவன் சங்கர் ராஜா, ஷான் ரோல்டன் ஆகிய ஆறு இசையமைப்பாளர்கள் இசையமைத்து உள்ளனர். இப்படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.