Categories
சினிமா தமிழ் சினிமா

‘கசட தபற’ ஆந்தாலஜி… ரிலீஸ் எப்போது தெரியுமா?… அதிரடியாக வெளியான அறிவிப்பு…!!!

கசட தபற ஆந்தாலஜி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக ஆந்தாலஜி படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதன்படி தமிழில் புத்தம் புது காலை, சில்லுக்கருப்பட்டி, பாவக்கதைகள், குட்டி ஸ்டோரி போன்ற ஆந்தாலஜி படங்கள் வெளியாகியிருந்தது. சமீபத்தில் வெளியான நவரசா ஆந்தாலஜி படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது இயக்குனர் சிம்புதேவன் கசட தபற என்கிற அந்தாலஜி படத்தை இயக்கியுள்ளார் . பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவும், டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரனும் இணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளனர்.

 

Image

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து கதைகளும் தென் சென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், சாந்தனு, வெங்கட் பிரபு, விஜயலட்சுமி, பிரேம்ஜி, பிரியா பவானி சங்கர், ரெஜினா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இந்நிலையில் கசட தபற படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்டு 27-ஆம் தேதி நேரடியாக சோனி லிவ் ஓடிடியில் இந்த படம் வெளியாகவுள்ளது.

Categories

Tech |