பிலிப்பைன்சில் புனித வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற கசையடி சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் புனித வெள்ளியை முன்னிட்டு கசையடி சடங்கு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். இதன் மூலமாக செய்த பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படுவது மட்டுமல்லாமல் நோய் நொடிகள் நீங்கி மனதில் நினைத்தது நிறைவேறும் என அவர்கள் நம்புகின்றார்கள்.
மேலும் தனது உடலை தானே வருத்திக் கொள்ளும் இதுபோன்ற செயல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கத்தோலிக்க தேவாலயம், செய்த பாவங்களுக்கு உளமாற வருவதன் மூலமாக மட்டுமே பரிகாரம் தேட முடியும் என கூறியுள்ளது.