உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரையில் கொரோனாவின் பரவல் வேகம் அதிகரித்து வரும் நிலையில் அதனை குறைக்க அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு, 50 சதவிகித திறனுடன் ஜிம்கள் மற்றும் ஸ்பாக்கள் இயங்குதல், தியேட்டர்களில் 50 சதவிகித வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
இந்தியா மற்றும் மட்டுமன்றி பல்வேறு உலக நாடுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமலில் வைத்துள்ளனர். அந்த வகையில் கச்சத்தீவில் நடைபெற உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க இந்தியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இலங்கையை சேர்ந்த 500 பேர் மட்டும் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. ஒரு காலத்தில் இந்தியர்களுக்கு சொந்தமான அந்த பகுதியில் பல்வேறு இந்தியர்கள் அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்பார்கள். இந்த செய்தி அவர்களுக்கு மாபெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.