கச்சத்தீவு திருவிழாவில் யாத்ரிகர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இலங்கை நாட்டில் கச்சத்தீவு திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் பங்கேற்க இலங்கை மற்றும் தமிழக யாத்ரிகர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அருட்தந்தையர்களின் பங்கேற்புடன் மட்டுமே திருவிழாவை நடத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும்போது கூறியதாவது “யாழ் மாவட்ட ரீதியாக 500 பக்தர்களை அனுமதிக்க தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும் இம்முறை யாத்திரிகர்களை அனுமதிப்பதில்லை எனவும், அருட்தந்தைகளின் பங்கேற்புடன் மட்டும் திருவிழாவை நடத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைக்கு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.