உக்ரைனுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே பெலாரசில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் ரஷ்யா, உக்ரேன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. ரஷ்யா தாக்குதலை ஏற்படுவதன் காரணமாக பல்வேறு நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் பறக்க கூடாது எனவும் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவில் உள்ள கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை விதிப்பதாக கனடா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுபற்றி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது, மக்களின் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது ஆகும். இந்த தேவையற்ற போர் இப்போது நிறுத்தப்பட வேண்டும். பீரங்கிகளை தாக்கி அழிக்கும் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளையும் உக்ரைனுக்கு நாங்கள் வழங்க இருக்கிறோம் என அவர் கூறியுள்ளார்.