கச்சா எண்ணெயின் விலை கடும் சரிவை சந்தித்த பிறகும் பெட்ரோல் டீசல் விலை குறையாமல் இருப்பதற்கு காரணம் இதுவே.
கொரோனாவின் தாக்கத்தால் கச்சா எண்ணெய் உலக சந்தையில் கடுமையான விலை சரிவை சந்தித்துள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் விலையில் அதிக அளவு மாற்றம் இல்லையே என அனைவரது மனதிலும் ஒரு சந்தேகம் இருக்கும். அதற்கான காரணம் உலகிலேயே பெட்ரோல் டீசல் மீது அதிக வரி விதிக்கும் நாடு நமது இந்தியா. இந்தியாவில் 69% பெட்ரோல் டீசல் மீதான வரி விதிக்கப்படுகின்றது. இத்தாலியில் 64%, பிரான்ஸ் 63%, கன்னடா 33%, அமெரிக்கா 19%.
பெட்ரோல், டீசல் மீதான வரியில் இந்தியா முதலிடம் பிடித்ததற்கான காரணம், அன்மையில் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் மீதான சாலை வரி உயர்வு ஒரு லிட்டருக்கு ரூபாய் 8, சுங்க வரி உயர்வு பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூபாய் 2, டீசல் லிட்டருக்கு ரூபாய் 5 மொத்தமாக பெட்ரோலுக்கு ரூபாய் 10 உயர்ந்துள்ளது. டீசலின் விலை ஒரு லிட்டருக்கு 13 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
தலைநகரான டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் 71.26 ரூபாய் இதில் வரி மட்டும் 49.42 . டீசல் ஒரு லிட்டருக்கு 69.39 இதில் வரி மட்டும் 48.09 அதாவது விற்பனை விலையில் 69% பணம் வரிக்கு செல்கின்றது. சென்ற ஆண்டு வரை பெட்ரோல் டீசல் மீதான வரி 50% ஆனால் தற்போது 69% உயர்ந்துள்ளது. கொரோனாவால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கடும் வீழ்ச்சி அடைந்தும் அந்த பலன் மக்களிடம் சென்று சேரவில்லை.
போன வருடம் டிசம்பர் மாதம் ஒரு பேரல் 65.5 டாலராக இருந்தது. தற்போது விலை வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து ஒரு பேரல் 23.38 டாலராக மாறி உள்ளது. இருப்பினும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி மக்களுக்கு எந்த ஒரு பலனையும் கொடுக்கவில்லை. காரணம் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியை சுங்க வரி உயர்வு சமன் செய்து விட்டது. இதனால் பெட்ரோல் டீசல் விலை குறைவதற்கு வாய்ப்பு இல்லை.