தமிழகத்தோட கடனை அதிகப்படுத்தியது தான் முதல்வர் பழனிச்சாமியோட ஒரே சாதனை என முக.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், 2006 – 2011 திமுக ஆட்சி காலத்தில் பொருளாதார வளர்ச்சி 19.64%. இன்றைக்கு பழனிசாமி ஆட்சியில் அது பாதியாக குறைந்து வெறும் 9.10%தான். 2009 – 2010 திமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 28.66% இருந்தது. அதில் 3இல் ஒரு பங்கு கூட இப்ப இல்ல. திமுக ஆட்சியில் உபரி நிதி இருந்துச்சு. ஆனால் அதிமுக ஆட்சியில பற்றாக்குறை தான் இருக்கு. பழனிச்சாமியோட ஒரே சாதனை என்னன்னா , தமிழகத்தோட கடனை அதிகப்படுத்தி, சாதனை செஞ்சிருக்காரு.
2011ஆம் ஆண்டு ஒரு லட்சம் கோடியாக இருந்த தமிழகத்தின் கடன் தொகையை அஞ்சு லட்சம் கோடியா மாத்திட்டாரு. குறிப்பா ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிகமாக கடன் வாங்கி இருக்குறாரு. 2016ஆம் ஆண்டும் ஆண்டு இரண்டு 2,52,000 கோடி ரூபாய், 2017ஆம் 3,14,000 கோடி ரூபாய், 2018ஆம் ஆண்டு 3,55,000 கோடி ரூபாய், 2019ஆம் ஆண்டு 3,97,000 கோடி ரூபாய், 2020ஆம் ஆண்டு 4,56,000 கோடி ரூபாய் என்று கடன் தொகை அதிகமாக வந்திருக்கு.
கடன் வாங்கி கஜானாவுக்கு கொண்டு வருவது. வந்த பணத்தை தன்னுடைய சம்பந்திக்கு பழனிச்சாமி டெண்டர் கொடுக்கிறது . வேலுமணி தனது பினாமிகளுக்கு டெண்டர் கொடுப்பது என இறங்கி இருக்கிறார்கள். கடன் வாங்குன பணத்தை வச்சு ஏதாவது புதிய தொழில் தொடங்கி வேலை வாய்ப்பு ஏற்படுத்தி இருக்காங்களா ? இல்ல. புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மட்டும் இல்லை இருக்கிற அரசு வேலை வாய்ப்புகளை தமிழர்களுக்கான இடத்திற்கு உத்தரவாதம் தராத ஆட்சியா பழனிச்சாமி ஆட்சி இருக்கிறது.
நான் வரும்போது தொலைக்காட்சியில ஒரு விளம்பரம் பார்த்தேன். என்னன்னா…. ஏற்கனவே இருக்குற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பச்சை பெய்ன்ட் அடிச்சு அத மினி கிளினிக்காக மாத்திட்டு வரக்கூடிய பழனிச்சாமி,காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்தை தொடங்கி வைக்க போறாரு. அது திமுக தொடங்கிய திட்டம். அதை தன்னுடைய திட்டம் போல காட்ட நினைக்கிறார் . இதைப்போல வெட்கம் கெட்ட செயல் ஏதும் இருக்கவே முடியாது என ஸ்டாலின் கடுமையாக ஆளும் அரசை சாடினார்.