கஞ்சாவுக்கு அடிமையானவர்களுக்கு தாயொருவர் மிளகாய் பொடி ட்ரீட்மென்ட் கொடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
தெலுங்கானா மாநிலம் சூரிய பேட்டை மாவட்டத்திலுள்ள கோடாட் என்ற பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு தனது மகன் கஞ்சாவுக்கு அடிமையானது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கோபமடைந்த பெண் தன் மகனை கம்பத்தில் கட்டி வைத்து அவரது கண்ணில் மிளகாய் பொடியை தூவியுள்ளார். மற்றொரு பெண்ணின் உதவியுடன் முகம் முழுவதும் மிளகாய் பொடியை பூசி தண்டனை கொடுத்துள்ளார். இதையடுத்து சிறுவன் எரிச்சல் தாங்க முடியாமல் அலறி துடித்தார்.
What happened when a mother found out that her 15-yr-old son was becoming a ganja addict? She came up with a unique treatment. Tie him to a pole & rub mirchi powder in his eyes & not untie him until he promises to quit. Incident in Kodad, #Suryapet dt, #Telangana. pic.twitter.com/Kw8FXaqtz7
— Krishnamurthy (@krishna0302) April 4, 2022
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த பெண்ணிடம் கட்டை அவிழ்த்து விடும் படி கேட்டுள்ளனர். ஆனால் தனது மகன் கஞ்சா பழக்கத்தை விடுவதாக உறுதி அளித்தால் மட்டுமே தண்டனையை கைவிடுவேன் என்று தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அந்த சிறுவன்தான் கஞ்சா புகைக்கும் பழக்கத்தை கைவிடுவதாக உறுதி அளித்தபின் அந்த பெண் தனது மகனின் கை கட்டுகளை அவிழ்த்து விட்டார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.