பட்டியில் இனத்தவர்களை தவறாக பேசியதற்காக தொடரப்பட்ட வழக்கில் கைதான மீராமிதுன் வருகிற 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வாக்குமூலம் பெற வேண்டியுள்ளதால் அவரை குற்றப்பிரிவு போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளனர். மேலும் விசாரணையின்போது மாறி மாறி மீராமிதுன் பேச வாய்ப்பு இருப்பதால் மனநல மருத்துவர் முன்னிலையில் பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
https://twitter.com/RazzmatazzJoe/status/1426030287838875659
இதற்கிடையில் சாய் பாபா படத்திற்கு அருகில் அமர்ந்து கஞ்சா அடித்து அதன் புகையை வெளியிடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சாய்பாபாவை அவமதிக்கும் வகையில் செயல்படுவதாக பக்தர்கள் கடுமையாகத் திட்டி வருகின்றனர். மேலும் மீராமிதுன் அதிகமாக போதை பொருட்களை பயன்படுத்தியது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.