மெக்சிகோவில் இளைஞர்கள் போதைக்காக கஞ்சா பயன்படுத்துவது, பயிரிடுவதில் குற்றம் அல்ல என அந்நாட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்நாட்டில் இனி ஒவ்வொரு நபரும் 28 கிராம் கஞ்சாவை கையிருப்பு வைத்துக் கொள்ளலாம். அதனைப்போலவே தங்களின் தேவைக்காக வீட்டில் 8 கஞ்சா செடிகள் வரை வளர்க்கலாம். அதேசமயம் பொது வெளியிலும் குழந்தைகள் முன்பும் கஞ்சாவை பயன்படுத்துவதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு மற்ற நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories