நெல்லையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்ற 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாநகர பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை அதிகமாக நடைபெறுகிறது. இதை தடுப்பதற்காக துணை போலீஸ் கமிஷனர் டி.பி,சுரேஷ்குமார் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை காவல்துறையினர் பாளையங்கோட்டை பகுதியில் சோதனை நடத்தி வந்த போது 1 1/4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து பாளையங்கோட்டை பர்கிட் மாநகரில் வசித்து வந்த 23 வயதுடைய முகமது அஸ்லாம், திம்மராஜபுரத்தில் வசித்து வந்த 24 வயதுடைய துரைப்பாண்டி மற்றும் வல்லநாடு நாணல்காட்டியில் வசித்து வந்த 23 வயதுடைய ஹரிஹரன் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதேபோன்று பேட்டை டவுன் பகுதியில் காவல்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். அதில் 330 கிராம் எடை கொண்ட தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் வைத்ததாக திருவேங்கடநாதபுரத்தை சேர்ந்த 42 வயதுடைய விஜயகுமார், கோவில்பட்டி நந்தித்தோப்பை சேர்ந்த 25 வயதுடைய பாலகிருஷ்ணன் மற்றும் ரகுமான் பேட்டையை சேர்ந்த அபுதாஹீர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த போதைப்பொருள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.