Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட வாலிபர்கள்…. 5 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!!!

 கஞ்சா கடத்தி வந்த 5 பேருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள  ஒரு பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர்  தினேஷ்குமார், கண்ணன், உள்ளிட்ட  5 பேருடன் சேர்ந்து தேனி மாவட்டத்தில் இருந்து  மதுரைக்கு காரில் கஞ்சாவை கொண்டு வந்துள்ளார். அதன்பின்னர் அந்த கஞ்சாவை தினேஷ்குமாரின் வீட்டில் வைத்து 2 சாக்கு பைகளில் பிரித்தனர். இந்நிலையில் ஒரு சாக்குப்பையை காரில் வைத்து ஆரப்பாளையம் பகுதிக்கு கொண்டு சென்றனர்.

அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர் காரை மடக்கி பிடித்து 5  பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ரவி, தினேஷ்குமார், கண்ணன், பெரியகருப்பன், பிரவீன் ராஜ் ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனால் இவர்கள் 5 பேருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா  1 லட்ச ரூபாய் அபராதமும்  விதித்து நீதிமன்ற நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |