Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கஞ்சா கடத்தல் வழக்கு…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…. 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது….!!

கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான 5 பேரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் எர்ணாகுளம் பகுதியில் கடந்த மாதம் கஞ்சா கடத்தி கொண்டு வந்த சரக்கு வாகனத்தை காவல்துறையினர் பிடித்துள்ளனர். அப்போது கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கந்தம்பாளையத்தை சேர்ந்த விஜயவீரன், குமாரமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன், மணியனூரை சேர்ந்த ராணி, ஈரோட்டை சேர்ந்த ராஜி, ஆனந்தி ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் கடத்தி வந்த சுமார் 1 கோடி மதிப்பிலான 340 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கைதான 5 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட சூப்பிரண்டு அதிகாரிகள் சரோஜ்குமார் தாகூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங்க்கு பரிந்துரை செய்துள்ளார். அதனை விசாரித்த ஆட்சியர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ராணி, ஆனந்தி, ராஜி, விஜயவீரன், மணிகண்டன் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் 5 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் ஆந்திராவில் பதுங்கி இருந்த கஞ்சா மொத்த வியாபாரிகள் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |