Categories
தேசிய செய்திகள்

“கஞ்சா செடி வளர்க்க அனுமதி கேட்ட விவசாயி”… ஆடிப்போன மாவட்ட ஆட்சியர்…. எச்சரித்த காவல்துறை…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், விவசாயம் செய்வதில் லாபம் இல்லை என்று கூறி கஞ்சா செடி வளர்க்க அனுமதி கேட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா ஒரு விவசாய நாடு, பல ஏழை விவசாயிகள் விவசாயம் செய்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். பல நேரங்களில் மழை இல்லாத காரணத்தினால் பயிர்கள் வாடி விடுகின்றன. சில சமயங்களில் அதிக மழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி விடுகின்றன. இப்படி விவசாயிகளின் நிலை நாளுக்கு நாள் மோசமாகத்தான் சென்றுகொண்டிருக்கின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அனில் பட்டேல் என்ற விவசாயி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒரு விண்ணப்ப கடிதம் எழுதியிருந்தார். அதில் அவர் தெரிவித்ததாவது: ” நான் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன்.

எனக்கு தொடர்ந்து நஷ்டம் ஏற்படுகின்றது. இந்தியாவில் பெரும்பாலான பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை இல்லாததால் அதிக விலைக்கு யாரும் வாங்குவதில்லை. நாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். விவசாயத்திற்கு ஆகும் செலவக்கு கூட பயிர்கள் விலை போவதில்லை. கரும்பு ஆலைக்கு கரும்புகளை அனுப்பி வைத்தால் பணம் கிடைக்கவில்லை. இதனால் கஞ்சா செடி வளர்த்தால் மட்டுமே நல்ல லாபம் கிடைக்கும். அதே நேரத்தில் நல்ல விலை கிடைக்கின்றது. அதனால் தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் கஞ்சா செடியை பயிர் செய்ய அனுமதி தர வேண்டும்.

இதற்கு நீங்கள் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் பதில் தரவில்லை என்றால் செப்டம்பர் 16ஆம் தேதி நான் கஞ்சா செடியை பயிரிடுவேன் என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாவட்ட நிர்வாகம் இதை உடனடியாக போலீசாருக்கு அனுப்பி வைத்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் கஞ்சா பயிர் இடக்கூடாது என்று எச்சரித்தனர். மேலும் கஞ்சா செடி வளர்த்தாள் 6 மாதம் சிறை, 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும் அவரிடம் கூறியுள்ளனர்.

Categories

Tech |