நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12 அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அதிதி சங்கர் நடித்துள்ளார். இந்த படத்தில் தான் அவர் அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படத்தில் கஞ்சா பூ கண்ணால என்ற பாடல் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
எனினும் இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் அதிகம் பேர் போதை பழக்கத்திற்கு அடிமையாக வரும் நிலையில் கஞ்சாவை மைய ப்படுத்தி பாடல் வரிகள் இடம்பெற்றது விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் கஞ்சா பூ கண்ணால பாடல் வரிகளுக்காக தான் பகிங்கரமாக மன்னிப்பு கேட்பதாக பாடலை எழுதிய பாடலாசிரியர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.