Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கஞ்சா போதையில் எல்லை மீறிய மகன்…! நாற்காலியால் அடித்து கொலை… கடலூரை அதிரவைத்த சம்பவம்…!!

கடலூர் அருகே கஞ்சா போதையில் தந்தையை மகனே நாற்காலியால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் முதுநகர் மோகன் சிங் தெருவை சேர்ந்தவர் பரசுராமன். 55 வயதான இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள். இதில் இளைய மகன் சக்திவேல் கஞ்சா போதைக்கு அடிமையானவர் என தெரிகிறது. தொடர்ச்சியாக கஞ்சாவை பயன்படுத்தி வந்த அவர், மன உளைச்சலில் இருந்ததாகவும் தெரிகிறது.

இதற்கிடையே தன் தந்தையுடன் வீட்டிலிருந்த சக்திவேல் திடீரென அவரை நாற்காலியில் அடித்து கொலை செய்ததாக தெரிகிறது. ரத்த வெள்ளத்தில் கிடந்த பரசுராமன் சடலத்தை மீட்ட போலீசார் மகன் சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Categories

Tech |