கஞ்சா போதையில் போலீசாரை தாக்கியவர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தெப்பக்குளம் பகுதி சேர்ந்த அருண்குமார் என்பவர் சென்ற 18 தேதி கஞ்சா போதையில் டோல்கேட் பகுதியில் வாகன ஓட்டிகளுடன் ரகளையில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது அரசியல் பிரமுகர் மனைவியின் கார் டிரைவர் நான் எனக் கூறி ஒரு பெண் தலைமை காவலர் உட்பட போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி இருக்கின்றார்.
மேலும் அவர் தாக்கியதில் போலீஸ் போதராஜ் என்பவர் கடுகாயமடைந்தார். இதையடுத்து பொதுமக்கள் அருண்குமாருக்கு தர்ம அடி கொடுத்தார்கள். பின் அருண்குமார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு தனது ஆடைகளை அகற்றி அரை நிர்வாணத்துடன் தற்கொலை செய்து கொண்டு உங்கள் வேலையை காலி செய்து விடுவேன் என மிரட்டி உள்ளார். பின் போலீசார் அருண்குமாரின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து வரவழைத்து அவர்களுடன் அனுப்பி வைத்தார்கள். மறுநாளை காலை அருண்குமாரின் வீட்டிற்கு சென்று நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு கைது செய்து செய்தார்கள்.