கஞ்சா விற்பனை செய்த வழக்கில் பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக செட்டியார்விளையை சேர்ந்த செல்வன், மனோஜ் ஆகிய 2 பேரையும் நேற்று முன்தினம் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 1/2 கிலோ கஞ்சா, சொகுசு கார், மோட்டார்சைக்கிள், 2செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் செல்வின் பளுதூக்கும் வீரர் என்பது தெரியவந்தது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செல்வின் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர் மும்பையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து நண்பரான மனோஜுடன் இணைந்து செல்வின் கஞ்சாவை காரில் கடத்தி வந்து குமரி மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு இடங்களில் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இரண்டு பேரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.