கடகம் ராசி அன்பர்களே..! இன்று இன்னல்கள் தீர விஷ்ணுபகவான் வழிபாட்டை மேற்கொள்வது ரொம்ப நல்லது. எதிலும் வேகத்தை குறைத்து பொறுமையாகவே செயல்படுங்கள். கொடுக்கல் வாங்கலில் ரொம்ப கவனமாக இருங்கள். பயணங்கள் செய்வதாக இருந்தால் ரொம்ப கவனமாக தான் செய்ய வேண்டும். புதிய நபர்களிடம் எந்தவித உரையாடலும் வைத்துக்கொள்ள வேண்டாம். உடல் அசதி சோர்வு போன்றவற்றால் எந்த ஒரு காரியத்தையும் சரிவர செய்து முடிக்க முடியாமல் இருக்கும். மனநிம்மதியும் கொஞ்சம் குறையும்.
கணவன் மனைவிக்கு இடையே உண்டாகக்கூடிய வாக்குவாதங்களால் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். கூடுமானவரை பேசும் பொழுது நீங்கள் நிதானத்தை மட்டும் கடைபிடியுங்கள் அது போதும். வாக்குவாதங்கள் ஏதும் செய்யாமல் இருங்கள் இன்று நிதி மேலாண்மை பொருத்தவரை ஓரளவு சிறப்பாகவே இருக்கும். இன்று முடிந்தால் இறை வழிபாட்டுடன் காரியங்களை மேற்கொள்ளுங்கள் ஓரளவு சிறப்பை கொடுக்கும். கூடுமானவரை கொடுக்கல் வாங்கல்களில் ரொம்ப கவனமாக தான் இன்று நடந்து கொள்ளவேண்டும். உங்கள் உடல்நிலையில் கொஞ்சம் கவனமாக இருங்கள். வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் வரக்கூடும்.
ஆகையால் கொஞ்சம் நிதானமாக செயல்படுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீலம் அதிர்ஷ்டத்தை உங்களுக்கு கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று விஷ்ணு பகவான் வழிபட்ட இல்லத்தில் மேற்கொள்ளுங்கள், அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் எப்போதுமே சந்தோஷம் நிலைத்து இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை:-தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்