கடகம் ராசி அன்பர்களே..! இன்று உடலாரோக்கியம் ஓரளவு சிறப்பை கொடுப்பதாகவே இருக்கும். மனமும் இன்று அமைதியாகவே இருக்கும். உற்சாகம் பிறக்கும். மனைவி பிள்ளைகளுடன் மகிழ்ச்சிகரமாக இன்று இருப்பீர்கள். தடைப்பட்ட சுப காரியம் முயற்சிகளை மேற்கொண்டால் தற்போது கைகூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிடைக்கும். இன்று மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தியான சூழல் நிலவும். தனவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியங்கள் சிறப்பாகவே செய்து முடிப்பீர்கள்.
தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகிச்செல்லும். பணியாட்களின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். தொழிலில் சரக்குகளை பாதுகாப்பாக வைப்பது மட்டும் ரொம்ப நல்லது. மாணவர்கள் தைரியமாக பாடங்களை படிக்க வேண்டும். படித்த பாடத்தை கண்டிப்பாக எழுதிப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும். இன்று மாணவர்களுக்கு ஓரளவு வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். முடிந்தால் மாணவச் செல்வங்கள் ஆலயம் சென்று பின்னர் பாடங்களைப் படிப்பது ரொம்ப நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்