Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…எண்ணங்கள் நிறைவேறும்…வளர்ச்சி அதிகரிக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே, இன்று வருமானம் திருப்தி தரும் சூழலில் இருக்கும். வளர்ச்சி அதிகரிக்கும், எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் எளிதில் நிறைவேறும், விருந்துகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். அலைபேசி தகவல்கள் அனுகூலத்தை கொடுக்கும். தொழில் வியாபாரம் சற்று மந்தமாகவே காணப்பட்டாலும் பணம் வருவது தடைபடாது. நண்பர்களுடன் தொடர்பான விசயங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். இன்று முன்னேற்றமான சூழ்நிலை இருக்கிறது. இன்று காதல் கைகூடும் நாளாகவே இருக்கிறது. திருமணம் பற்றிய பேச்சுவார்த்தையை இன்று நடத்தினால் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள், பாடங்களில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தி படித்தால் ரொம்ப சிறப்பு.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை:-தெற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |