கடகம் ராசி அன்பர்களே ...! இன்று நண்பர்களிடம் சொந்த விஷயத்தைப் பற்றி பேசுகிறீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். உற்சாகமுடன் செயல்பட்டு தொழிலில் குறிப்பிட்ட வளர்ச்சி இலக்கை அடைவீர்கள். உபரி பண வருமானம் வந்து சேருங்க. முக்கியமான செயல் எளிதாக நிறைவேறி மனம் இன்று மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும். இன்று நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது அவரிடம் கொஞ்சம் கவனமாக நடப்பது மட்டும் போதுமானதாக இருக்கும். பெரியோர்களின் ஆதரவால் நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றி விடுவீர்கள்.
பொருளாதார சிக்கல்கள் தீரும். சிலர் கடன் வாங்கி உடனே திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். மனதில் தேவையில்லாத வெளியில் சொல்லமுடியாத வேதனை மற்றும் பிரச்சனைகள் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டீர்கள் கவலைப்படாமலேயே காரியங்களைச் செய்வீர்கள். இதனால் முன்னேற்றமும் அடைவீர்கள். நட்பால் ஆதாயமடைவீர்கள். காதலில் உள்ளவர்களுக்கு காதல் இன்று கைகூடும். திருமண பேச்சுவார்த்தை இன்று நடத்துங்கள்.
அனைத்தும் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சிறப்பாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு ஒரு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுபோலவே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்