Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு.. கடவுள் வழிபாடு அவசியம்.. நிதானமாகவே செயல்படுங்கள்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று காரிய வெற்றிக்கு கடவுள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாளாகவே  இருக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்கு கொஞ்சம் சிரமமாகவே இருக்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வீடு மாற்றங்களை செய்ய முன்வருவீர்கள். இன்று குடும்பத்தில் சௌக்கியம் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பான நிலையே காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை இன்று வெளிப்படும்.

அடுத்தவர்களின் பிரச்சனைகளை நீங்கள் தீர்த்து வைப்பீர்கள் பயணங்கள் சாதகமான பலனையே கொடுக்கும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரக்கூடும். இன்று எதைச் செய்வதாக இருந்தாலும் கொஞ்சம் நிதானத்தோடு செய்யுங்கள். முடிந்தால் பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்வது ரொம்ப நல்லது. இன்று மாணவச் செல்வங்கள் கல்விக்காக கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள், உழைப்பது பெரிதல்ல படித்த பாடத்தை எழுதி பார்ப்பதுதான் மிகவும் சிறப்பு.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிஷ்ட திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |