கடகம் ராசி அன்பர்களே..! இன்று அண்ணாமலையானை வழிபட்டு ஆனந்தம் கொள்ள வேண்டிய நாளாகவே இருக்கும். சிலர் உங்களுக்கு உதவாத ஆலோசனை கூட சொல்லக் கூடும். உங்களின் வாழ்வில் நடைமுறையில் ஓரளவு சீராகும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் முயற்சியினால் உற்பத்தி விற்பனையை நீங்கள் உயர்த்தலாம். பணவரவை விட செலவு தான் இன்று இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும். கணவன் மனைவிக்கிடையே மனம் வருந்தும் படியான சம்பவங்கள் நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே எதையும் பேசி தீர்த்துக் கொள்வது ரொம்ப நல்லது.
இன்று வீடு, வாகனம் சீர் செய்யக்கூடிய செலவு இருக்கும். கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள். செலவை மட்டும் கட்டுப்படுத்தி கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். பிள்ளைகளுக்காக கூடுதலாக இன்று உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் பொறுப்புகளை உணர்ந்து பாடங்களை படிக்க வேண்டும். முடியும் வரை கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தயவுசெய்து விளையாட்டை ஓரங்கட்டிவிட்டு பாடங்களில் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சைநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் பச்சை நிறம்